Tuesday, August 21, 2012

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த மேலும் சிலர் கைது!

Tuesday, August 21, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த 69 பேருடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து இந்த படகு கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.

இதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் 10 பேர் சிலாபத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் தமிழர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த மேலும் 83 பேர் நேற்றைய தினமும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறு செல்வதற்கு முயற்சித்த 1,200 பேர் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அவர்களில் 150 வர்த்தகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த தமிழர்களே அதிகளிவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment