Tuesday, August 21, 2012

இலங்கை அகதிகளை பார்க்க சென்ற வைகோ உள்பட 500 பேர் கைது!

Tuesday, August 21, 2012
சென்னை::இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்காக செங்கல்பட்டு, பூந்தமல்லி, புழல் உள்ளிட்ட இடங்களில் அகதி முகாம்கள் உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்ய கோரியும், சிறப்பு முகாம்களில் இருந்து திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வைகோ தலைமையில் மதிமுகவினர் குமணன் சாவடியில் இருந்து பூந்தமல்லி கரையான் சாவடியில் அமைந்துள்ள சிறப்பு முகாம் நோக்கி ஊர்வலமாக சென்று அகதிகளை பார்க்க முயன்றனர். இதற்கு பூந்தமல்லி போலீசார் தடை விதித்து, சாலைகளில் தடுப்பு அமைத்தனர். உடனே மதிமுகவினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்பட 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment