Tuesday, August 21, 2012

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் நெருக்கடி!

Tuesday, August 21, 2012
இலங்கை::குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கு தோற்றும் எதிர்பார்ப்புடன், அதிகளவிலானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்துள்ளமையினால் இந்த நிலை தோன்றியுள்ளது.

கொழும்பிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் நேற்றைய தினத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக 2,400 க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிடுகின்றார்.

இந்தக் காலப்பகுதியில் 2000 ற்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் ஒருநாள் சேவையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மாத்தறை மற்றும் கண்டி அலுவலகங்களின் ஊடாகவும் நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment