Tuesday, August 21, 2012

காத்தான்குடியில் மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு!

Tuesday, August 21, 2012
இலங்கை::காத்தான்குடி 05ம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த உ/த மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் வயது18, நேற்றிரவு (2012-08-20) 09.30மணியளவில் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை குத்தூஸ் தெரிவித்தார்.

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப்பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மானவன் நேற்று இரவு 09.15மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலிற்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுதுவிட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த மாணவன் நேற்று இரவு 09.15மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலிற்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுதுவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளதாகவும் இரவு முழுக்க அவரை விடுவிக்காது, இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையில் காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவர் அடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகாமையில் பெற்றுக் கொண்டதாகவும், மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பது சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் க.பொ.த உ/த மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவன் நேற்றிரவு முழுக்க வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment