Tuesday, August 21, 2012

256 நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

Tuesday, August 21, 2012
சென்னை::படிக்கும் பழக்கத்தை பெருக்க 256 நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
எந்த ஒரு நாட்டில் படிக்கும் பழக்கம் பெருகுகிறதோ அந்த நாடு விழிப்புணர்வு மிக்க நாடாக கருதப்படும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலகங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 96 ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. அதனை நிர்வகிக்க 96 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ரூ 5,200-20,000/- + தர ஊதியம் ரூ.2,000/- என்ற ஊதிய விகிதத்தில் நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், 160 பகுதி நேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் நூலகங்களை நிர்வகிக்க 160 ஊர்ப்புற நூலகர் பணியிடங்களை ரூ2,500 - 5,000 + தர ஊதியம் ரூ.500/- என்ற சிறப்பு ஊதிய விகிதத்தில் நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment