Friday, August 24, 2012இலங்கை::வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பொலிஸார் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு தேடப்படுகின்ற அந்த குடும்பத்தின் மகன் குறித்த தகவலை அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த இளைஞனின் நிழற்படத்தை பொலிஸ் தலைமையகம் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
குமாரசாமி பிரசான் எனப்படும் குறித்த இளைஞன் தொடர்பான தகவலை
011 2 662 323 அல்லது 071 4 44 55 52 அல்லது 011 2 364 860 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த முக்கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலங்கள் மீட்கப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னதாக குறித்த இளைஞன் மருந்தகமொன்றில் பெருந்தொகை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள தகவலுக்கு அமையவும் விசாரணைனகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment