Friday, August 24, 2012

புலிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் சந்தர்ப்பம் கிடைத்த உடன் சமாதானத்தை சீர்குலைக்கின்றன - பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Friday, August 24, 2012
இலங்கை::இனவாத அடிப்படையில் இருந்து செயற்படும் புலிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் சந்தர்ப்பம் கிடைத்த உடன், கிடைத்து;ளள சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பிரதான உரையை நிகழ்த்திய போதே பாதுகாப்புச் செயலாளர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மிக குறைந்த எண்ணிக்கையிலான புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

எனினும் சகல விடயங்கள் மற்றும் காரணங்களில் அடிப்படையில், வடபகுதி மக்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவோ, சமூகத்தில் புறந்தள்ளப்படவோ காரணங்கள் இல்லை. மன்னார், பலாலி, யானையிறவு, பூநகரி, தள்ளாடி, காரைநகர்,முல்லைத்தீவு இராணுவ முகாம்கள் 1951 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காகவே, நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புலி பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் இருந்து தற்காத்து கொள்ளவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. அமைதியான சூழல் உருவாகிய பின்னர், தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருவதுடன், அந்த காணிகள் மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ் பேசும் காவற்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, போர் நடைபெற்ற பிரதேசங்களில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்தமையானது அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment