Thursday, August 23, 2012
திருப்போரூர்::திருப்போரூரில் தொல்லியல் துறையை கண்டித்து மதிமுக சார்பில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக நேற்றிரவு மதிமுகவினர் திருப்போரூர் பகுதியில் போஸ்டர் ஒட்டினர். அப்போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்க கட்டிடத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதை திருப்போரூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் லவன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், விஜய் ஆகியோர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்ததும் மதிமுக ஒன்றிய செயலாளர் சிவராமன் மற்றும் நிர்வாகிகள் எழில், ஞானம் உள்பட கட்சியினர் சிலர் திரண்டு வந்தனர். மதிமுக, அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர் லவன் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து திருப்போரூர் போலீசில் இருதரப்பினர் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

No comments:
Post a Comment