Thursday, August 23, 2012

சிசெல்ஸ் நாட்டின் அமைச்சர்-டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்!

Thursday, August 23, 2012
இலங்கை::சிசெல்ஸ் நாட்டின் மூலதனம், இயற்கை வளம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பீற்றர் ஏ.ஜீ. சிநோன் அவர்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் உள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இரு நாட்டினதும் சிறுகைத்தொழிலாளர்களது தொழில்துறை நலன் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக இரு நாட்டினதும் சிறுகைத்தொழிலாளர்களுக்கு இரு நாட்டிலும் பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவினை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கான வசதிகளை இரு நாட்டிலும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி. ஜெகராசசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment