Thursday, August 23, 2012
இலங்கை::லண்டன் ஒலிம்பிக் விழாவின் ஒளிபரப்பு உரிமம் சம்பந்தமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் பிரதிவாதி என்ற ரீதியில் எம்.டி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு இன்று பதில் மனு தாக்கல் செய்தது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பதில் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விழாவின் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக எம்.டி.வி/ எம்.பி.சி ஊடக வலையமைப்புப்புக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முதலில் பெற்றுக்கொண்டது.
ஆசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் இலங்கை ரூவாஹினி்க் கூட்டுத்தாபனத்திற்கு ஒலிம்பிக் விழாவின் ஏகபோக ஒளிபரப்பு உரிமத்தை வழங்கியிருப்பதாக தெரிவித்து தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த தடையுத்தரவு இடைக்கால தடையுத்தரவாக மாறியது. கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தின் குறித்த தீரமானத்தை
எம்.டி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு உயர்நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்கு உட்படுத்தியது.
உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததன் மூலம் ஒலிம்பிக் விழாவை ஒளிபரப்பும் உரிமம் எம்.டி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்புக்கு கிடைத்தது.
கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமாக எம்.டி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தவறான அனுகுமுறையில் தடையுத்தரவை ஒருதலைபட்சமாக பெற்றுக்கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒலிம்பிக் விழாவின் தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் மே 23ஆம் திகதி முதல் ஜூலை 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தம்மால் ஔிபரப்ப முடியாமல் போனதென எம்.டி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனான பதில் மனுவை சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசத்தின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி சுகத் சுல்தேரா ஆகியோர் தாக்கல் செயதுள்ளனர்.

No comments:
Post a Comment