Friday, August 24, 2012

கடந்தகாலம் பற்றி பேசுவதில் பிரயோசனமில்லை. தற்காலம் குறித்தே நாம் பேசுகிறோம் - ஜீ.எல்.பீரிஸ்!

Friday, August 24, 2012
இலங்கை::இலங்கைக்கு வந்து உண்மை கண்டறிவதற்காக சர்வதேச பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் வசதிகளை வழங்கும் என்பதால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் 22.08.12 நாடாளுமன்றத்தில் தெரிவித்துளளார்.

சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்தில் அரசாங்கம் தடை எதனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கடந்தகாலம் பற்றி பேசுவதில் பிரயோசனமில்லை. தற்காலம் குறித்தே நாம் பேசுகிறோம். வரலாற்று தகவல்கள் குறித்து பேசுவதை விட மாறுப்பட்டுள்ள நிலைமை பற்றி பேசவேண்டும். கடந்த காலம் தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதால் சாதாரண தீர்வு கிடைக்காது. யாரும் தவறு செய்யவில்லை எனக் கூறுவது தவறாகும். இந்த தவறுகளை அனைவரும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு நாடுகள் இவ்வாறான பிரச்சினையின் பின்னர், தீர்வுகளை வழங்க ஒரு தசாப்த காலத்தை எடுத்துக்கொண்டன. எனினும் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் பாராட்டக் கூடிய வகையில் செயற்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு பாராட்டுக்களை வழங்குங்கள். இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த முகாம்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட்டது. சம்பந்தன் கூறியது போன்ற நிலைமைகள் முகாமில் இருக்கவில்லை. வடக்கிற்கு சென்ற பலர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அங்குள்ள முன்னேற்றமான நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

சர்வதேச சமூகம் கூறுவது போன்ற தீர்வை இலங்கையில் கொண்டு வர முடியாது.இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது இலங்கையின் பணி என இந்தியாவும் கூறியுள்ளது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment