Thursday, August 23, 2012

தேர்தல் வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவளைகள் கத்துவது போல கத்துகின்றது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 23, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் மழைக்காலம் வரும் போது தவளைகள் கத்துவது போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வந்தால் கத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தேர்தலில் மக்களுக்கு விற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலாளிகள் போல் இந்த யோசனையை கொண்டு வந்துள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலானது தமிழ் மக்களின் அழிவு.அவர்கள் மூன்று முகங்களை வைத்து கொண்டு வேலை செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு ஒரு முகமும், அரசாங்கத்திற்கு ஒரு முகமும், இடம்பெயர்ந்த மக்களுக்கு இன்னுமொரு முகம் என மூன்று முகங்களை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 13வது அரசியல் அமைப்புத்திருத்ததை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர். மேலும் சிலர் 5 வருட ஆட்சி மற்றும் ஈழம் குறித்து பேசுகின்றனர். தமிழ் மக்கள் இப்படி ஏமாற்ற வேண்டாம் என்றே நாங்கள் கேட்கிறோம். கூட்டமைப்பினர் இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்கள். அவர்கள் தமது மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment