Thursday, August 23, 2012
இலங்கை::கொழும்பில் உள்ள தெற்காசிய கஹபார் ஊடகத்திற்காக பிரதீப் செனவிரத்தினவின் கட்டுரையின் தமிழாக்கம்)
2006 ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கெதிரான போர் உக்கிரமடையும் காலகட்டத்தில், தனது உயர்தர கல்வியை நிறைவு செய்ய தயாராக இருந்த கந்தசாமி சதிகுமரன், தனது சொந்த ஊரான முல்லைத்தீவில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் கட்டாய ஆட்ச்சேர்பின் கீழ் கடத்திச் செல்லப்பட்டார். போரின் போது அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சதிகுமார் 2009இல் யுத்தம் நிறைவடையும் வேளையில் தனது மீதமான விடுதலைப்புலி சகாக்களுடன், பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தார்.
பின்னர் வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்தார். 2010 இல் தனது புனர்வாழ்வை நிறைவுசெய்து, தாய், தந்தை மற்றும் 2 இளைய சகோதரிகளை கொண்ட தனது குடும்பத்துடன் மீள இணைந்தார்.
இவர் தெற்காசிய கஹபார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் அவ் அமைப்பிற்கு பலவந்தமாகவே இணைக்கப்பட்டோம். விடுதலைப்புலிகள் எமது இளைமைக்கால வாழ்வை சீர்குழைத்துவிட்டனர். எமக்கு நல்லதொரு தொழில் தற்போது தேவை” எனக் கூறினார்.
இலங்கை அரசாங்கமானது பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து கிராமங்களை பாதுகாப்பற்காக சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவை உருவாக்கியது. தற்போது இப் படைப்பிரிவானது, பல விதமான சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மீள்நிர்மாணம் மற்றும் பண்ணை வேலைத்திட்டங்களுக்கும் உதவிவருகின்றது. இங்கு அனைவராலும் வரவேற்கப்பட்ட விடயம் யாதெனில் இலங்கை அரசாங்கமானது, இச் சிவில் பாதுகாப்புப் படையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் உறுப்பினர்கள் இணைவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமையாகும்.
தனது குடும்பத்தை காப்பற்ற தொழில்தேடித்திரிந்த சதிகுமரனுக்கு இது ஒரு சிறந்த வாய்பாக அமைந்தது. “எவ்வித தொழிலும் இல்லாமல் இருந்த எனக்கு இச்சந்தர்ப்பம் இறைவனால் கிடைக்கப்பெற்ற வரம் என்றும் இதனூடாக எனது வாழ்வை மீள கட்டியெழுப்ப முடியும் என தான் உறுதியாக நம்புவதாக சதிகுமரன் குறிப்பிட்டார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்
சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் ஆட்சேர்ப்பிற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலையடுத்து, தகுதியுடைய ஏராளமான விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். சிவில் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரால் ஆனந்த பீரிஸ் தகவலின் படி, 1,650க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக கூறினார், இவர் கடந்த ஜூலை 17 ஆம் திகதி, முன்னாள் புலி உறுப்பினர்கள் பணிபுரிவதற்காக அமைக்கப்படவுள்ள பண்ணைக்கான நிலத்தை அடையாளம் காண்பதற்காக வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் கஹபார் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்தில் “இவர்களுக்கான மாதாந்த சம்பளமாக 18000/= ரூபா வழங்கப்படும். ஆர்சேர்ப்பிற்கான அறிவித்தலின் சிறந்ததொரு விளைவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நல்லதொரு சந்தர்ப்பத்தை இவர்களுக்கு ஏற்படுத்தும் முகமாகவே நாம் இந் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்” என்று கூறினார்.
இதுவரையில் 1,650 முன்னாள் புலிகள், சிவில் பாதுகாப்புப் படைகளுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், எதிர்வரும் மாதங்களில் மேலும் ஆட்சேர்ப்பிற்கென விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக, சிவில் பாதுகாப்புப் படைகளுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து இவர்களுக்கான தொழில் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ரஜகுரு கஹபார் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படையின் புதிய பொறுப்புக்கள்
முன்னாள் புலிகளுக்கு வழங்கப்படும் உதவிகளை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது வாழ்வதாரத்தை மேற்கொள்ள அவர்கள் பண்ணைகளில் வேலை செய்வதையிட்டு நாம் கவலைப்பட வேண்டியதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் சேவையிலும் அவர்கள் சேர்க்கப்பட்டதையும் அக் கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் என்.ஞானக்குமரன் கருத்து தெரிவிக்கையில், மிகக் கூடுதலான முக்கியதுவம் மீள ஒன்றிணைத்தளுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், தமிழ் சமூகத்தை சேர்ந்த கல்வித்துறை சார்தவன் என்ற ரீதியில் இச் செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன் என்றார்.
கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான மொஹமட் கலீல் தெரிவிக்கையில், முன்னாள் புலி உறுப்பினர்களின் பழைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சமூகத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது. கிழக்கில் நாம் புலிகளின் அச்சுறுதலுக்கு மத்தியில் வாழ்ந்துள்ளோம். ஆனால் அவ் யுகம் இப்பொழுது முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது. நாம் எதிர்காலத்தை நல்லிணக்கத்துடன் நோக்கவேண்டும். சிவில் பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களை இணைத்தது மிகச் சிறந்ததொரு செயற்பாடாகும். இவர்களுக்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழில் வழங்கப்படுவதையிட்டு நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாத நிபுணர் கருத்து தெரிவிக்கையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை பராமரிப்பது அரசாங்கத்திற்கும், தனியார் நிறுவனங்களிற்குமான மிக முக்கியமான பொறுப்பாகும். இவர்களை சிவில் பாதுகாப்புப் படைகளில் இணைத்ததன் மூலம் அவர்களை சிறந்தொரு பிரஜையாக வருவார்கள் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment