Thursday, August 23, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும்,இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காஸிக்கும் இடையில் சந்திப்பு!

Thursday, August 23, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும்,இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காஸிக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும், அக்காஸிக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென அக்காஸி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு தேவையான உதவிகளைவழங்கத் தயார் என அக்காஸி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெறவுள்ளசந்திப்பின் போது இந்த விடயம் குறித்து பேச உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலையான சமாதானத்தை எட்ட முடியும் என அக்காஸி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்புடன் செயற்டவில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையில்சிங்கள குடியேற்றங்களும் பௌத்த விஹாரைகளும் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அக்காஸியிடம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment