Thursday, August 23, 2012
சென்னை::சென்னை தவிர தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் மின்சாரம், ஒரு மணி நேரம் மின்வெட்டு என நேற்று முதல் அமல் செய்யப்பட்டது. இதனால் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கடும் மின்வெட்டு நிலவுகிறது. கடந்த பிப்ரவரி முதல் மே வரை தினமும் 12 மணி நேர மின்வெட்டு அமல் செய்யப்பட்டது.
பின்னர், காற்றாலை மின் உற்பத்தி அதிகமானதால் மின்வெட்டு சற்று தளர்த்தப்பட்டது. மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக கிராமப்புறங்களில் தினமும் 4 முதல் 6 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மின்வெட்டு கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று முதல் மீண்டும் 12 மணி நேர மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
பல பகுதிகளில் காலையில் 3 மணி நேரம், பிற்பகலில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பகலில்தான் இந்தக் கொடுமை என்றால், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மின் சப்ளை, ஒரு மணி நேரம் மின் தடை என மாறி மாறி கண்ணாமூச்சி காட்டத் தொடங்கிவிட்டது. இதனால், இரவில் தூங்க முடியாமல் பெண்களும் குழந்தைகளும் அவதிப்பட்டனர். பலர் தெருக்களில் தஞ்சமடைந்தனர். ஆனால், தெருவிலும் கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர். கணவர், பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தனுப்ப முடியாமல் பெண்கள் வேதனையடைந்தனர்.
எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 வாரத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடர் மின்வெட்டால் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். சென்னை நகரில் மட்டும் வழக்கம்போல ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. ஆனால், புறநகர் பகுதிகளிலும் மற்ற மாவட்டங்களிலும் 12 மணி நேர மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததால் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால், குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் மோட்டாரை இயக்க முடியாததால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். சிறுதொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன?
மின் வெட்டு குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் கூறியதாவது: காற்றாலையில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் நேற்று பெரும் மந்தநிலை காணப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு காற்றாலை மின்சாரம் வெறும் 300 மெகாவாட்டாக குறைந்துள்ளது. அடுத்த ஓரிரு நாளில் காற்றாலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். அதேபோல கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 240 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று காலைதான் ஒரு அணுஉலையின் பழுது நீக்கி செயல்பட தொடங்கியுள்ளது. மற்றொரு அணுஉலை பழுதை சரிசெய்து வருகின்றனர். அவை செயல்பட தொடங்கியதும் மின் தடை ஓரளவு சீராகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment