Monday, August 20, 2012
ஸ்ரீநகர்::ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னுர் பகுதியில் இன்று காலை இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். இதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொட்£ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பாகிஸ்தான் ரேஞ்சர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை எற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சம்பா பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் 25 அடி ஆழத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கப்பாதை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து எல்லை பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய நிலைகள் மீது அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் அக்னுர் பகுதியில் இன்று காலை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள் ஒரு கும்பல் ஊடுருவ முயன்றது. அவர்களை நோக்கி இந்திய வீரர்கள் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த கும்பல் பின்வாங்கி மறைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியிலிருந்து அந்நாட்டு ரேஞ்சர்கள் எல்லை பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். இந்திய தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது.

No comments:
Post a Comment