Monday, August 20, 2012

இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதா என்பதை சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்க்க வேண்டும் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Monday, August 20, 2012
இலங்கை::இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதா என்பதை சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்

துப்பாக்கி ஏந்தி போரிட்ட பயங்கரவாதிகளையும் மன்னித்து புனர்வாழ்வளித்துள்ள நாம் ஒருபோதும் பழிவாங்கும் நோக்கமுடையவர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

கடந்த முப்பது வருட காலயுத்தத்தின் போது மக்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்களை நாம் அறிவோம். அத்தகைய கொடூரமான யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்து பாரிய அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கியே மக்கள் முன் வந்துள்ளோம்.

மனித உரிமை தொடர்பாக உலகம் எம்மீது விரல் நீட்டுகிறது. நாம் அவர்களுக்குக் கூறுவதெல்லாம் இங்கு நேரில் வந்து பாருங்கள் என்பதே.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் டொலர்களுக்காகக் கூறும் பொய்களை நம்ப வேண்டாம். எமக்கு ஒளிப்பதற்கு எதுவுமே இல்லையென நாம் அவர்களுக்குக் கூறுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment