Saturday, August 18, 2012
சென்னை::அசாமில் ஏற்பட்ட வன்முறை பல மாநிலங்களிலும் பரவி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் பீதியால் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவ, மாணவிகளும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசாமில் போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு வாரம் நீடித்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ராணுவம் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து நிலைமை சீராக தொடங்கியது. எனினும் கலவரம் முழுமையாக ஓயவில்லை. கோக்ரஜார் மாவட்டத்தில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதையடுத்து கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. அசாம் கலவரத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஊர்வலம் நடந்தது. அதிலும் வன்முறை ஏற்பட்டு 2 பேர் பலியாயினர். இதற்கிடையே, வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடக்கும் என்று பல மாநிலங்களில் வதந்திகள், மிரட்டல் எஸ்எம்எஸ்கள் பரவின.
பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடந்தது. இதனால் மும்பை, புனே, பெங்களூர், ஐதராபாத், சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட நகரங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். வெளிமாநிலங்களில் உள்ள வடகிழக்கு மாநில மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்திருந்தாலும் பீதி அடங்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து மக்களின் பீதியை போக்கவும், வதந்திகளை தடுக்கவும் செல்போனில் எஸ்எம்எஸ்களை ஒட்டுமொத்தமாக அனுப்ப நாடு முழுவதும் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று வடகிழக்கு மாநிலத்தவர் மீது 3 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. பெங்களூரின் அசோக் நகர் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை வழிமறித்து மர்ம கும்பல், திடீர் தாக்குதல் நடத்தியது. மேலும் 2 இடங்களில் மணிப்பூரை சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர். இதனால், கர்நாடகாவில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மேலும் அச்சமடைந்து உள்ளனர். கர்நாடகாவில் இருந்து கடந்த 2 நாளில் மட்டும் 16 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். வடமாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எஸ்எம்எஸ் அனுப்பியது தொடர்பாக பெங்களூரில் நேற்று 6 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூர், மைசூர், மங்களூரில் கூடுதலாக 600 அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் பெங்களூரில் பல அழகு நிலையங்கள், ரெஸ்டாரன்ட்கள் தொழிலாளர்கள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அசாம் அமைச்சர்கள் 2 பேர் நேற்று பெங்களூர் வந்து, வதந்திகளை நம்பி யாரும் வெளியேற வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்டனர். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 20,ம் தேதிக்குள் வடமாநிலத்தவர் வெளியேற வேண்டும் என எஸ்எம்எஸ்கள் பரவி வருகிறது. இதனால் உஸ்மானியா உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களும், தொழிலாளர்களும் ஆந்திராவைவிட்டு வெளியேறி வருகின்றனர். அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று திடீர் போராட்டம் நடந்தது. சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கற்களும் வீசப்பட்டன. பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அசாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. டிவி வீடியோ காட்சிகளை வைத்து வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து லக்னோவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அலகாபாத்திலும் நேற்று திடீர் வன்முறை வெடித்தது. இதில் போலீசார், பொதுமக்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ‘தமிழகத்தில் வடகிழக்கு மாநிலத்தவர் யாரும் அச்சப்பட தேவையில்லை, போலீசார் மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் வடமாநிலத்தவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். ‘யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். தங்கியுள்ள இடத்தில் உங்கள் வேலையை தொடருங்கள்Õ என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஏதாவது பிரச்னை என்றால் தொடர்பு கொள்வதற்கு செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் பீதி குறையவில்லை. அவர்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்பி வருகின்றனர். சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு கட்டிட கட்டுமான பணி, மேம்பால பணிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். செக்யூரிட்டி பணியில் அசாம் மாநிலத்தவரும், டிரைவர் மற்றும் பார்சல் அலுவலகங்களில் ஜார்கண்ட் மாநிலத்தவரும், நகை பொற்கொல்லர்களாக மேற்கு வங்கத்தினரும் பணியாற்றி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் திட்ட பணியில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:
Post a Comment