Saturday, August 18, 2012
இலங்கை::மனதில் எவ்வித குரோத எண்ணங்களுமின்றி, தமது நண்பர்களுடன், ஆடிப் பாடி குதூகலமாக கழிக்கும் காலம் சிறுவர் பராயமாகும். சிறுவர்களுக்கென பாரிய பொறுப்புக்கள் வழங்கப்டுவதில்லை. அவர்களது அடிப்படைத் தேவையான உணவு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவது பெற்றோர்களதும், பாதுகாவலர்களதும் கட்டாயக் கடமையாகும்.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, சிறுவர் தினம்,சிறுவர் பாதுகாப்புச் சட்டம் என பல வகையான நிகழ்வுளை நடத்தி விழிப்புனர்வுகளை ஏற்படுத்த எத்தனயோ அமைப்புகளும் நிறுவகனங்களும் நாளாந்தம் பாடுபட்டு வருகின்றன.
பச்சிளம் சிறுவர்களின் மனதை மாற்றி பயங்கரவாதிகளாக்கும் விடயத்தில்பெயர் போனவர்கள் புலிகள் இயக்கத்தினர். அவர்களின் ஆதரவாளர்கள் இன்று வேறுநாடுகளுக்குத் தப்பிச்சென்று அங்குள்ள சிறுவர்களின் மனதில் பயங்கரவாத உணர்வை விதைக்க முற்படுவது அவர்களது கடந்த கால நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகின்றது.
அண்மையில் சுவிட்சர்லாந்தில் சிற்றிபோய்ஸ் விளையாட்டுகளகத்தில் இடம்பெற்ற சம்பவமும் இதற்க்குச் சான்றாகும்.
அதாவது புலம்பெயர் சிறுவன் ஒருவன் இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட ரீசேர்ட் ஒன்றை அணிந்துள்ளதைக் கன்ட “சிற்றிபோய்ஸ்” விளையாட்டுக் கழக புலி ஆதரவாளர் ஒருவர் சிறுவனை அணுகி ' நீ உன்வீட்டில் சிங்களமா பேசுறநீ' என்று கேட்டுள்ளார். ‘இல்லை’ எனப்பதிலளித்த சிறுவனிடம், 'உனக்கு தெரியாதா இது சிங்களவனின் கொடி என்பதும் தமிழனின் கொடி புலிக்கொடி என்பதும்' என்று மிரட்டியுள்ளார். பின்னர் 'புலிகள் இலங்கையிலே தமிழீழம் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்' என எச்சரித்து, ’நீ இனிமேல் இதை அணியக்கூடாது' என உத்தரவிட்டுள்ளார்.
ஜனநாயகவிழுமியங்களை பேணி இனவாதம் , மதவாதம் குறுந்தேசியவாதம் துறந்து பல்லினச்சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்ற சுவிட்சர்லாந்திலே இது நிகழ்ந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு 12 வயதுச் சிறுவன் ஒருவனிடம் இனவாத நஞ்சூட்ட அல்லது சிறுவனை மிரட்டி அடிபணியவைக்க மேற்கொள்ளப்பட்ட நாடுகடந்த பயங்கரவாதம் தொடர்வதை இந்த நிகழ்வு வெளிகாட்டுகின்றது.
புலிகள் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பல பிரதேசங்களை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக நடாத்தியது மட்டுமல்லாது அங்கு வாழ்ந்த சிறுவர் சிறுமிகளை கட்டாயத்தின் பெயரிலும், பலவந்தமாகவும் போராட்ட அமைப்பில் இணைத்து தற்கலைக் குண்டுதாரிகளாக மாற்றியது இவர்களது இராணுவ உபாயம் என்பது உலகறிந்த உன்மையாகும்.
அச் சின்னஞ் சிறார்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து அடிப்படை உரிமையான உணவு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, பாதுகாப்பு ஆகியன முற்றாக மறுக்கப்பட்டு. அவர்களது மனதில் கொடூரமான வஞ்சக உணர்வை வளர்த்து அவர்களை கொடூரமான கொலையாளியாக மாற்றினர். ஆனால் அதற்க்கு இலங்கையில் 2009 இல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் தமது பிள்ளைகளுடன், எவ்வித பீதியும் இன்றி, பூரணமான நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த 594 சிறுவர் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் சமூகத்தடனும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளின் மிச்சசொச்சமான ஆதரவாளர்களில் தொந்தரவு இன்னும் அங்கு வாழும் தமிழ் மக்களையும், சிறுவர்களையும் விட்டு அகலவில்லை என்பது இச்சம்பவத்தினூடாக அறிய முடிகிறது.
மேலும் அல்பாணியர், ஈரானிர் , ஈராக்கியர், வட அமெரிக்கர், எதியோப்பியர் , நைஜீரியர், சீனர் ,ஜப்பானியர் , போத்துக்கீசர் என பல மொழிபேசுகின்ற பல இனங்களைச் சேர்ந்த முழு உலகமே ஒன்றுகூடி கல்வி கற்கின்ற ஒரு சூழலில் வளரும் ஒரு சிறுவனிடம் இனவாதத்தையும் குறுந்தேசியவாதத்தையும் மனதில் பதியவைக்க முனைந்ததின் ஊடாக புலிஆதரவாளர்கள் தொடர்ந்தும் வன்செயல்தேடி அலையும் இனவெறியர்கள் என்பது உறுதியாகின்றது.
புலிகள் வன்னியில் சிறார்களின் உரிமையை பறித்து ஆயுதங்களை திணித்த அதே பாணியில் குறிப்பிட்ட நபர் சிறுவன் அணிந்திருந்த ரீசேட்டை 'நீ இனிமேல் இதை அணியக்கூடாது' என எச்சரித்திருக்கின்றார். தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதானால் இலங்கையின் தேசியச்கொடியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற புலிகளின் காட்டாட்சியை குறிப்பிட்ட நபர் சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளார். தமிழர் எனத் தம்மை கூறிக்கொள்ளும் இவர்கள் முறையாக தமிழ் பேசத் தெரியவாதவர்கள் என்பது வேதனைக்குரிய விடயம்.
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் எனும் பெயரால் புலிக்கொடி ஏற்றுகின்றவர்கள் ஒரு சிலரிடம் இதற்கு எதாவது நோக்கங்கள் உண்டா அல்லது இது தமிழ் மக்களுக்கு எதாவது நன்மை தரப்போகிறதா என விணவிய போது, புலிகளின் தலைமை தவறுகள் செய்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இந்தபோராட்டத்தினை நம்பிச்சென்று தமது உயிரைப் பலிகொடுத்த ஒருசிலரும் இருக்கத்தானே செய்கின்றார்கள் அவர்களுக்காகவே இதைத் தொடர்கின்றோம் எனத் தலையைச் சொறிகின்றனர்.
தமிழ் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வை ஒன்றை போர்த்துகொன்ட புலிகள் தமிழ் மக்களின் சுதந்திரம் எனும் பெயரால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களுக்கு அடிமை விலங்கு பூட்டி குறுகிய ஒரு நிலப்பரப்பினுள் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மறுத்தனர்.
புலிகளின் பிடியில் சிக்குண்ட மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை முற்றாக இழந்தனர். தாம் விரும்பும் பத்திரிகையை வாசிக்கவும், விரும்பிய தொலைக்காட்சி ஒன்றை பார்த்து ரசிக்கவும் தமது உறவினர்களுடன் கூட உரையாடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது புலம்பெயர் நாடுகளின் புலிக்கொடி தூக்கி அலையும் இளையோருக்கு சொல்லப்படவேண்டும் தெரியப்படுத்த வேன்டியது இன்றய காலத்தின் தேவையாகும், இவர்களது போராட்டம் இன்று ஒட்டுமொத்த தமிழினத்தை நட்டாற்றில் விட்டுச் சென்றபின்பும் அவரவது அடிவருடிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர்.இவ்வாறு பளைய புராணங்களைக் கூறி புலம்பெயர் தமிழ் இளையோரையும் அடுத்த தலைமுறையையும் வன்முறையை நோக்கி நகர்த்த முற்படுகின்றனர்.
தமிழ் மக்களையும் சிறுவர்களையும் அடக்கியாழும் பன்பு விடுதலைப்புலிகளுடன் ஒட்டிப்பிறந்த ஒன்றாகும். ஆனால் இன்னும் அவர்களது ஆதரவாளர்களை விட்டு இன்னும் அகலவில்லை.
இங்கு தெளிவாகும் விடயம் யாதெனில், புலம்பெயர் நாடுகளில் வாழும் தழிழ்மக்கள் மீது, புலிகளின் நடவடிக்கைகளை திணித்து அங்குள்ள மக்களை நிம்மதி அற்றவர்ளாக மாற்றி அதிலிருந்து குளிர் காய முற்படும் பினாமிகளிலிருந்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேன்டும்.

No comments:
Post a Comment