Monday, August 20, 2012

மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை - இந்தியா!

Monday, August 20, 2012
புதுடெல்லி::தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இந்தியாவின் மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இவ்வாறு இலங்கைக் கடற்படையினர் இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தால் அது யுத்த முனைப்பாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடல் வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இலங்கையில் யுத்தம் காரணமாக சில தசாப்தங்களாக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment