Wednesday, August 22, 2012
இலங்கை::கொழும்பு மாநகரம் தொடச்சியான பல அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவது போல், மட்டக்களப்பு மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்யும் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்டக் கூட்டமொன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று(ஆகஸ்ட-21) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மட்டக்களப்பு நகரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர்களான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன், பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பாராட்டியதுடன், இதற்கு அனைவரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தை தொடர்ந்து, கத்தான்குடி கடற்கரையின் தற்போதய நிலையை பாதுகாப்புச் செயலாளர் சென்று மேற்பார்வை செய்தார்.

No comments:
Post a Comment