Thursday, August 23, 2012

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்!

Thursday, August 23, 2012
இலங்கை::சற்று முன்னர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இதற்கான காரணங்கள் தொடர்பில் எமக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதை தொடர்ந்து அரசில் அமைச்சர் பதவியொன்றை பெறுவதற்காக தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்லை என்றும், கட்சிக்காகவே தான் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அரசின் பிரதியமைச்சராக இருந்துகொண்டு அரச வாகனங்களையும் வளங்களையும் பாவித்து முஸ்லிம் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வதை தான் விரும்பவில்லை என்றும், தனது சொந்தச் செலவில் கட்சிக்காக இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவத்தார்.

கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்து விட்டே இந்த ராஜினாமாவை தான் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment