Thursday, August 23, 2012

டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் : அம்பத்தூரில் நாளை கருணாநிதி பேசுகிறார்!

Thursday, August 23, 2012
சென்னை::திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அம்பத்தூரில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. அம்பத்தூர் நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் வரவேற்புரையாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் முன்னிலை வகிக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, உரையாற்றுகிறார்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் க.சுந்தரம், கே.பி.பி.சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி வேணு, சிவாஜி, முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் என்.எம்.துரைசாமி, கே.நீலகண்டன், தி.வ. விஸ்வநாதன், பகலவன், ஆவடி நகராட்சி தலைவர் சா.மு.நாசர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டம் குறித்து அம்பத்தூர் நகர செயலாளரும், சென்னை மாநகராட்சி 7வது மண்டலகுழு தலைவருமான ஜோசப் சாமுவேல் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். தொண்டர்கள் அமரும் வகையில் விசாலமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூருக்கு வருகை தரும் கருணாநிதிக்கு விழா மேடை வரை 15 இடங்களில் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment