Thursday, August 23, 2012
இலங்கை::பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பதைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று காலை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தம் நிறைவடைந்து சமாதானத்தை கொண்ட அபிவிருத்தி பயணத்தில், பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடுப்பதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்காக உள்நாட்டில் ஒரு சட்ட அமைப்பு இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளைத் தடுத்த நிறுத்த முடியாது.
எனவே ஜீ-7 நாடுகளின் நிதி செயற்பாட்டுக் குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்க பயங்கரவாதிகளின் நிதிகளை முடக்கும் 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டவிதிகளை மீளாய்வூ செய்து மறுசீரமைக்க வேண்டும் என்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment