Friday, August 24, 2012லண்டன்::ஓட்டலில் இளம்பெண்ணுடன் இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானதால், இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், சார்லஸ் - டயானாவின் இளைய மகனுமான ஹாரி, ஹெலிகாப்டர் பைலட்டாக இருக்கிறார். இவருக்கு வயது 27. இவர் சமீபத்தில் விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் இளம்பெண்ணுடன் ஹாரி நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால் இங்கிலாந்து ராணி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முக்கிய பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் வெளியிடும் டிஎம்இசட் அமெரிக்க வெப்சைட்டில், ஹாரியும் அவருக்கு பின்னால் இளம்பெண் ஒருவரும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் கடந்த புதன்கிழமை வெளியாகின. அந்த போட்டோக்களில் உள்ளது ஹாரிதான் என்பதை ராணி குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஹாரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'நிர்வாண போட்டோக்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவிப்பதற்கு இல்லை' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment