Friday, August 24, 2012இலங்கை::வெள்ளவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 28 வயதான பிரபா குமாரசுவாமி இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை - ராமகிருஷ்ண டெரஸ் பகுதி வீடொன்றில் இருந்து கடந்த 18ஆம் திகதி காலை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.
தந்தை, தாய், மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
இவர்களை கொலை செய்தவர் அவர்களது மகன் என பொலிஸாரது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவர்கள் ஹட்டன் - கொட்டக்கலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
குறித்த குடும்பத்தின் மூத்த மகனான சந்தேகநபர் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தாய், தந்தை, தங்கை ஆகியோரை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தார்.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இவரை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment