Friday, August 24, 2012புதுடில்லி::2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கூட்டுச்சதியாளராக சேர்க்க வேண்டும், அவரிடம் சி.பி.ஐ.,விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தனது உத்தரவை பிறப்பித்தது. மனுவை தள்ளுபடி செய்தாலும் இவரை விட மாட்டேன், இது மோசமான தீர்ப்பு , இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனு போடுவேன் என்று தீர்ப்பிற்கு பின்னர் சு.சாமி கோர்ட் வளாகத்தில் கூறினார்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஏலம் காரணமாக இந்தியாவின் மெகா ஊழல் விசாரிக்கப்பட்டு மத்திய அமைச்சராக இருந்த ராஜா முதல் அதிகாரிகள் என 14 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமினில் வெளியே இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் அப்போதும் இப்போதும் நிதி அமைச்சராக இருக்கும் ப,சிதம்பரம், ராஜாவின் தவறை தடுக்க தவறி விட்டார். இதனால் இவரும் கூட்டுச்சதிக்கு காரணமாக இருந்துள்ளார். எனவே இவரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என கோரும் மனுவை சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் சு.சாமி தொடர்ந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி போதிய ஆதாரத்தை சாமி தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த மனுவை ஏற்க மறுத்து விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சாமி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிதம்பரத்திற்கு இதில் பங்கு இல்லை என்றும், நிதி அடிப்படையில் இவர் ஆதாயம் பெறவில்லை எனவே இவரை விசாரிக்க உத்தரவிட முடியாது என்றும் மறுத்து விட்டது.
தொடர்ந்து பேராடுவேன்: சு. சாமி பேட்டி :
தீர்ப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய சு.சாமி; இந்த விவகாரத்தில் நாட்டுக்கு பெரும் இழப்பை சிதம்பரம் ஏற்படுத்தியிருக்கிறார். இன்றைய தீர்ப்பு மோசமானது. மறு ஆய்வு மனு போடவுள்ளேன். ஏர்செல் - மாக்சிஸ் டீலிங்கிலும் இவரது மகனுக்கு தொடர்பு உள்ளது. நான் நாட்டிற்காக போராடுகிறேன். எனது போராட்டம் தொடரும் என்றார்.
No comments:
Post a Comment