Friday, June 1, 2012

கொள்ளையர் மீது துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை தேடும் பொலிஸார்!

Friday, June, 01, 2012
இலங்கை::எம்பிலிப்பிட்டிய நகரில் வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இரண்டு கொள்ளையர்கள் அம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அம்பிலிப்பிட்டிய குட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரை அடையாளங் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment