Friday, June 1, 2012

58 நாடுகள்; 2500 பெளத்த பிரதிநிதிகள் பங்கேற்பு: தாய்லாந்து சம்புத்த ஜயந்தி விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு!

Friday, June, 01, 2012
இலங்கை::தாய்லாந்து விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டு இளவரசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

கெளதம புத்தர் ஞானோதயம் பெற்று 2600 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தாய்லாந்து அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற சம்புத்த ஜயந்தி விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார்.

2600 வது சம்புத்த ஜயந்தியை மிகக் கோலாகலமாக நடத்துவதற்கு தாய்லாந்து இராச்சியத்தின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற சம்புத்த ஜயந்தி விழா நேற்று முற்பகல் மகாசுலாலோங்கொன்ராஜ் பல்கலைக் கழகத்தில் பிரதான கேட்போர் கூடத்தில் தாய்லாந்தின் சுலாபோன் (Princess Chulabhom of Thailand) இளவரசியின் தலைமையில் ஆரம்பமானது. ஆரம்ப விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவை தாய்லாந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் வரவேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 9வது வெசாக் நினைவு கொண்டாட்டமான இந்த 2600வது சம்புத்த ஜயந்தி விழா இன்று 31 முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெறுகின்றது. 58 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பெளத்த பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்ற அதே நேரத்தில், இலங்கையில் இருந்து 400 க்கும் மேற்பட்ட சங்கைக்குரிய பெளத்த பிக்குகள் கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகாசுலோலோங்கொன்ராஜ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் தம்மகோசஜன் தேரர் அவர்களுக்கு இந் நிகழ்வை நினைவுகூருமுகமாக நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.

இந்த சம்புத்த ஜயந்தி நினைவு விழாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கலாசார, கலை அலுவல்கள் அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க, புத்தசாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.

No comments:

Post a Comment