Friday, June 1, 2012

திருடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் 10 இலட்சம் சன்மானம் - பொலிஸார்

Friday, June, 01, 2012
இலங்கை::கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் தொல்பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது திருடப்பட்ட பொருட்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவை தொடர்பிலான தகவல்களை 0112 32 81 38 அல்லது 0112 32 01 41 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி இரவு தேசிய அருட்காட்சியகம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த தொல்பொருட்கள் சில இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment