Friday, June, 08, 2012கனேடிய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அகதிகளுக்கான புதிய சட்டம் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பாதிக்கப்படலாம்-ராதிகா சிட்சபேஷன்!
கனேடிய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அகதிகளுக்கான புதிய சட்டம் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பாதிக்கப்படலாம் என்று (கனேடிய புலிகளின் ஆதரவு) நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேஷன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த புதிய சட்டத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
கனடாவிற்குள் அகதிகளாக வருவோர் நிரந்தரமாக அங்கு வாழ்வதை தடுக்கும் நோக்கிலே இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டம் மூலம் அகதிகள்,அவர்களின்; குடும்பத்துடன் இணைந்து வாழ முடியாத அளவிற்கு நியாயமற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராதிக சிட்சபேஷன் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த சட்டத்தின் மூலம் எம் சி சண்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற அகதிகள் திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும் சிற்சபேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
இதேவேரளை கனேடிய அரசாங்கத்தின் இது போன்ற அடக்குமுறைகளுக்குப் பயந்து தற்போது அகதிகள் வெளியே வரவும் பயப்படுவதாக(கனேடிய புலி ஆதரவு) ராதிகா சிற்சபேசன் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment