Friday, June 8, 2012

சிரியா அதிபர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் : ஹிலாரி கிளின்டன்!

Friday, June, ,08, 2012
இஸ்தான்புல்::சிரியா அதிபர் பசார் அல் ஆசாத், பதவியை ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி, சிரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ஹமா நகரில் நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். சிரியாவின் எதிர்கால அரசியல் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால், அதிபர் பதவியில் இருந்து ஆசாத் விலக வேண்டும். நாட்டை விட்டே அவர் வெளியேற வேண்டும். சிரியாவில் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கான வழியை ஆசாத் ஏற்படுத்தி தரவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க முடியும். என்றார்.

No comments:

Post a Comment