Wednesday, June 6, 2012

இளமை திரும்ப சர்ஜரி வேண்டாம்.. லேசர் போதும்!!

Wednesday, June, 06, 2012
வாஷிங்டன்::முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் தோல் சுருக்கத்தை போக்க ஆபரேஷன் தேவையில்லை. லேசர் சிகிச்சை போதும் என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் உள்ள தோல்களில் சுருக்கம் விழ தொடங்கும். இப்பகுதியில் உள்ள தசைகள் மிக மெல்லியவை என்பதால் சுருக்கம் விழுந்ததும் பளிச்சென வெளியில் தெரியும். வயதான தோற்றம் உண்டாகும். இதை அகற்ற சில பெண்கள் அதிகம் செலவு செய்து ஆபரேஷன் செய்துகொள்வார்கள்.

இந்நிலையில், தோல் சுருக்கத்தை போக்க நவீன லேசர் சிகிச்சையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மேத்யூ ஷுல்மன். இதுபற்றி அவர் கூறியதாவது: சுருக்கம் நீக்கவேண்டிய அல்லது சிகிச்சை தேவைப்படும் தோல் பகுதிகளில் உள்புறம், வெளிப்புறம் என இரு பக்கங்களிலும் லேசர் சிகிச்சை அளிக்கப்படும். உட்புற லேசர் கதிர்கள் அப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு செல்களை கரைக்கும்.

லிபோசக்ஷன் முறையில் இந்த கொழுப்பு செல்கள் உறிஞ்சி எடுக்கப்படும். இதன் பிறகு, வெளியில் செலுத்தப்படும் லேசர் கதிர்கள் சுருக்கத்தை போக்கி, தோலை இறுக்கமாக்கும். இந்த சிகிச்சை மூலம், கோலாஜன் சுரப்பு அதிகரிக்கும். பல ஆண்டுகள் வரை தோல் சுருக்கம் ஏற்படாது. 68 வயது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட இந்த வகை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இவ்வாறு மேத்யூ ஷுல்மன் கூறினார்.

No comments:

Post a Comment