Wednesday, June 6, 2012

மட்டக்களப்பு முள்ளாமுனை வயல்பகுதியிலிருந்து கட்டிப்பிடித்த நிலையில் காதல்ஜோடியின் சடலம் வயலில் கண்டுபிடிப்பு!

Wednesday, June, 06, 2012
இலங்கை::மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள முள்ளாமுனை வயல்பகுதியிலிருந்து கட்டிப்பிடித்த நிலையில் காணப்பட்ட இளைஞரினதும் யுவதியினதும் சடலங்கள் இன்று புதன் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விவசாயியான நெல்வயல் சொந்தக்காரர் தனது வேளாண்மையைப் பார்வையிடச் சென்றபோது இந்த இரு சடலங்களும் கட்டிப்பிடித்த நிலையில் நெல் வயலுக்குள் கிடப்பதைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பிணமாகக் கிடந்தவர்களின் வசமிருந்த அடையாள அட்டை மூலம் அவர்களில் ஒருவரான பெண் திக்கோடையைச் சேர்ந்த 22 வயதான அழகுதுரை மேகலா என்றும் மற்றையவரான ஆண் களுதாவளை 4 ஐச் சேர்ந்த 38 ஆம் கொலனி வாசியான 34 வயதுடைய அழகரெட்ணம் இழங்கோ என்றும் தெரியவந்திருக்கின்றது.

இருவரிடமும் கைத்தொலைபேசிகளும் காணப்பட்டுள்ளன. ஆயித்தியமலைப் பொலிசார் மேலதிக விசாரைணகளில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதியின் ஆணை கிடைத்ததும் மரண விசாரணை இடம்பெறவிருப்பதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இவர்களின் சடலங்களுக்கருகில் விஷமருந்து போத்தலும் இவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை இடம் பெற்றவருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment