Thursday, June 07, 2012இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர் மெத்தியூ ரசல் லீ, ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சம்மேளனத்தின் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக (ஏசியன் ரிபியூன்) செய்தி வெளியிட்டுள்ளது.ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்காகவே அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஐக்கிய நாட்டு செய்தியாளர் சம்மேளனத்தில் இருந்து அவர் வெளியேற்றப்படுவார்.
இதற்கிடையில் விசாரணைகள் முடியும் வரையில் செய்தியாளர் அடையாள அட்டையை வழங்க, ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சம்மேளனம் மறுத்துள்ளது.
இலங்கையின் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்புக்களில் மெத்தியூ லீ தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment