Thursday, June 7, 2012

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை- மிச்செல் சிசன்!

Thursday, June 07, 2012
இலங்கை::மனித உரிமைகளுக்கு தமது நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்காக பெயரிடப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டினுள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகள் தாமதமாகியுள்ளமை, நல்லிணக்க செயற்பாடுகளிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிசன் சுட்டிக்காட்டியுள்ளார் என வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மோதல் இடம்பெற்ற பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றல் மற்றும் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை, நடத்துவதற்கான திகதி நிர்ணயம் போன்ற விடயங்கள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியதாகவும் இலங்கையின் புதிய தூதுவராக பெயரிடப்பட்டுள்ள சிசன் கூறியுள்ளார்.

ஈராக்கிற்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி சட்ட இயற்றுநராக கடமையாற்றி வருவதுடன், அதற்கு முன்னர் அவர் லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்...

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை. அத்துடன் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளும் மந்த கதியில் செல்வதாக மிச்செலி சிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தூதுவர் நியமனத்துக்கான உறுதியை அமெரிக்க செனட் இவருக்கு வழங்கிய பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் ரொபட் கேசி, இலங்கை தமது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை 6 மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டபோதும் அதனை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தினார்.

அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்
.

No comments:

Post a Comment