Thursday, June 7, 2012

2 வாரத்தில் 5வது முறை: ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Thursday, June 07, 2012
பலசூர்::ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, விமானப்படை மற்றும் தரைப்படையின் பயன்பாட்டுக்காக ஆகாஷ் ஏவுகணையை தயாரித்துள்ளது. 60 கிலோ வெடிபொருளை சுமந்து சென்று, 25 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இதன் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க, கடந்த ஒரு 2 வாரமாக தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 24, 26, 28 மற்றும் ஜூன் 1ம் தேதி ஒடிசா மாநிலம் சாந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட இது, நேற்று மீண்டும் 5வது முறையாக பரிசோதிக்கப்பட்டது. நேற்று, விமானப்படையின் பயன்பாட்டுக்காக வெற்றிரகரமாக பரிசோதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment