Tuesday, June,05, 2012நியூயார்க்::அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற விரும்புகிறேன் என்று கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கம்யூனிச நாடான கியூபாவை கொண்டு வர பல முயற்சிகள் நடந்தன. ஆனால், முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கியூபா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதன்பின் பிடல் காஸ்ட்ரோவை கொல்லவும் பல சதிகள் நடந்தன. இந்நிலையில் வயதாகி விட்டதால், தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவை நாட்டின் அதிபராக்கி ஒதுங்கி கொண்டார் பிடல். இந்நிலையில் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மேரிலா காஸ்ட்ரோ எஸ்பின், சிஎன்என் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகின் குடிமகள் என்ற அளவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற விரும்புகிறேன். நிறைய மாற்றங்களை கொண்டுவர ஒபாமா முயற்சிக்கிறார். அவர் 2வது முறை அதிபரானால், மாற்றங்களை கொண்டு வருவார். அதனால்தான் அவர் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகிறேன். இது என் சொந்த கருத்து. அவருடைய பேச்சுகள் அடிமனதில் இருந்து வருவதாக நினைக்கிறேன். அவரிடம் நிறைய ஐடியாக்கள் இருக்கின்றன. அவர் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளார். அதை தொடர்ந்து செயல்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும்.
ஒபாமா நேர்மையானவர் என்று நினைக்கிறேன். அவருக்கு அமெரிக்காவில் அரசியல் ஆதரவு கிடைத்தால், கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க முடிவெடுக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த நிலை உருவானால், இருநாட்டுக்கு இடையில் உறவு மேம்படும்.
No comments:
Post a Comment