

Tuesday, June,05, 2012இலங்கை::லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வரவேற்பு நிகழ்வுகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பார்க் லேன் ஹில்டன் விருந்தகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வானது பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை முன் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் இலங்கை மற்றும் லண்டன் தேசிய கொடிகளை ஏந்தியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
பிரித்தானிய மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்கள் லண்டனில் பல்வேறு இடங்களில் நடந்துகொண்டிருக்கின்றன.
இதில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியாருடன் நேற்று லண்டன் சென்றடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் பக்கிங்ஹாம் மாளிகையில் நடக்கும் விருந்திலும், புனித போல் தேவாலயத்தில் நடக்கும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
அதேவேளை, ஜனாதிபதியின் விஜயத்தை கண்டித்து புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவார்களால் லண்டனில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கடந்த ஞாயிறன்று இரவு லண்டன் ஹீத்துறு விமானநிலையத்தில் கூடிய பலர் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றதாக புலிகளின்^ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
அப்படியான ஒருவர் மகாராணியாரின் வைபவத்தில் கலந்துகொள்வது மகாராணிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என அவர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை நேற்று திங்களன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கிருப்பதாகக் கூறப்படும் விடுதிக்கு எதிராக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அதில் ஒன்று அவருக்கு எதிராகவும் அடுத்தது ஆதரவாகவும் நடந்தது.
இரண்டிலும் சிலநூறுபேர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இரு தரப்பிலும் கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போடு சற்று குறைவானதுதான்.
ஆனால், பிரித்தானிய அரசாங்கத்தின் விருந்தாளியாக வந்திருக்கின்ற போதிலும், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு கணிசமான சங்கடத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment