Tuesday, June,05, 2012இலங்கை::கொழும்பு மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர்களிடம் இருந்து 42 கையடக்க தொலைபேசிகளும், சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ.டப்ளியு. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் 4 தொலைபேசிகள் செய்மதி தொலைபேசிகள் எனவும் வீடியோ எடுக்கக் கூடிய வசதிகள் அதில் இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த புலிச் சந்தேக நபர்கள் சிறையில் வைத்து படம்பிடித்த வீடியோ காட்சிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வீடியோ காட்சிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் இருந்தமை தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் கொடிப்பிலி கூறியுள்ளார்..
கையடக்க தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேக நபர்களிடம் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்கள் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
சிறைச்சாலையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை இந்த சந்தேக நபர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளதுடன், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணா நிலைப் போராட்டத்தையும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். இவர்களின் இந்த நடவடிக்கைகக்கு சிறை அதிகாரிகள் சிலரின் உதவிகள் கிடைத்திருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment