Tuesday, June 26, 2012
சென்னை::இலங்கை வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுதல், 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துதல் ஆகியன குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை செல்ல உள்ளதாக உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை செல்லும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.அவர் கடந்த வருடமும் இலங்கை சென்றிருந்தார்.
எவ்வாறாயினும் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் எவ்விதத்திலும் நடவடிக்கை எடுக்காது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment