Tuesday, June 26, 2012
செங்கல்பட்டு::செங்கல்பட்டு சிறப்பு முகாமில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா. பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 32 பேரில், ஆறு பேர் தங்களை வழக்குகளிலிருந்து விடுவித்து, திறந்தவெளி முகாம்களில் தங்க வைக்கக் கோரி, கடந்த 15ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மேலும் ஐந்து பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று 11வதுநாள் உண்ணாவிரதத்தின்போது, வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் இளங்கோ ஆகியோர், உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அனுமதி மறுப்பு: காலை 11 மணிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாண்டியன், முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களை சந்திக்க வந்தார். முறையான அனுமதி பெற்று வந்தால்தான் உள்ளே அனுமதிக்க முடியும், எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். எனவே, அவர் அங்கிருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சைப் பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு மாதத்திற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை விடுவிப்பதாகக் கூறியும், இதுவரை விடுவிக்காததால், அவர்கள் கடந்த 15ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். முகாமில் இலங்கைத் தமிழர்களும், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். எந்த விசாரணையும், குற்றச்சாட்டும் இல்லாமல், விடுதலை உண்டா? இல்லையா? என்று தெரியாத நிலையில், சிலரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. தீர்ப்பு நகல்களையும் வைத்திருக்கின்றனர். அதன்பிறகும் பொய் வழக்குகள் போட்டு உள்ளே தள்ளி இருக்கின்றனர்.
குற்றச்சாட்டு இருந்தால், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லட்டும். அவர்களுக்கு ஒழுங்காக தண்ணீரும், உணவும் வழங்கப்படவில்லை. வழக்குகளுக்காக வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு கூட வெளியே விடவில்லை. இலங்கை சித்ரவதை முகாமைவிட, இது மோசமான முகாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். மருத்துவமனையில் இருப்பவர்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விடுவிக்க முயற்சி செய்வதாக, கூறிவிட்டு வந்தேன். இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment