Tuesday, June 26, 2012

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

Tuesday, June 26, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா 1991 முதல் 1996வரை முதல்வராக பதவி வகித்த போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ஸி66 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 1996ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களுர் தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை தொடங்கியது. கடந்த 2005 முதல் இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில், நீதிபதி மல்லிகார்ஜூனையா முன்னிலையில் நேரில் ஆஜராகி 1314 கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதையடுத்து, வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலாஇதுவரை சுமார் 604 கேள்விகளுக்குப் பதிலளித்த £ர். உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு பெற்று வந்தார். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் இல்லாததால் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எச்.எல்.கோகலே, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நபாடே வாதிடும்போது, ‘ தனி நீதிமன்றத்தில் இதுவரை சசிகலா 599 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இன்னும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. பதிலளிக்க சில ஆவணங்கள் தேவை. அவை இதுவரை கிடைக்கவில்லை. எனவே, வழக்குக்குத் தடை விதிக்க வேண்டும்‘ என்று வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ‘இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. சசிகலாவுக்கு 2 வார அவகாசம் தருகிறோம். அப்போது, எந்த ஆவணங்கள் வேண்டும் என்ற விபரத்தையும் அதற்கான ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment