Wednesday, June, 06, 2012சென்னை::இலங்கையில் தமிழர்கள் தனி இராச்சியக் கோரிக்கையினை முழுமையாக நிராகரித்து விட்டனர். இலங்கையில் பிரிவினை வாதத்துக்கு இனி இடமேயில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஒக்டோபர் மாத அமர்வில் ௭மது மனித உரிமை மேம் பாட்டு அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளோம் என இந்தியாவுக்கான இலங் கையின் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித் துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் துரதிர்ஷ்ட வசமானது. இந்தத் தீர்மானமானது நியூயோர்க்கில் இயங்கும் புலம்பெயர் தமிழ் குழுக்களையும் லண்டனில் இயங்கும் உலகத் தமிழ் மன்றம், நோர்வேயில் இயங்கும் நெடியவனின் இயக்கம் என்பவற்றுக்கு துணிவை ஊட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி: தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை பற்றிய மனிதவுரிமை பேரவையில் நடைபெறக்கூடிய உரையாடலின் தற்போதைய நிலை என்ன?
பதில்: இரு விடயங்கள் உள்ளன. முதலாவது அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனான எமது உறவு நிலை. இரண்டாவது இந்தியாவுடனான எமது உறவு நிலை. தீர்மானத்தினை பொறுத்தவரை அவ்வாறு நடைபெற்றிருக்கக் கூடாது என்பதே எமது விருப்பம். ஆனாலும் நாம் தொடர்ந்து செயற்படுகின்றோம். தீர்மானம் எவ்வகையிலேனும் இலங்கைக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நாம் நம்பவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான அதன் உள்ளடக்கம் ஒரு புதிய விடயமல்ல. நாம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஏற்கனவே படிப்படியான அமுலாக்கத்திற்கு உட்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் ஐ.நா. தீர்மானம் எமக்கு எந்தவொரு பெறுமதியையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும் மேற்படி நிகழ்வினால் இந்தியாவுடனான அல்லது சர்வதேசத்துடனான எமது உறவுகள் பாதிக்கப்படப் போவதில்லை.
கேள்வி: பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஒரு தோற்றுவிட்ட நாடு என கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இதுபோன்ற உணர்வலைகளை வெளியிட்டுள்ளார். இப்பேர்வழிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இப்பேர்வழிகளையும் அவர்களது சொற் பிரயோகங்களையும் கள நிலைமைகள் பற்றிய புரிதல் முற்றிலுமாக இல்லாதவர்களும் தவறான தகவல்களை பெற்று வைத்திருப்பவர்களுமே பயன்படுத்துகின்றனர். இலங்கைக்கு விஜயம் செய்து கள யதார்த்தங்களை புரிந்து கொண்டவர்கள் இத்தகைய சொற்களை பயன்படுத்தமாட்டார்கள். கடந்த நிதியாண்டில் இலங்கை ஆசியாவிலேயே மிகவுயர்ந்த பொருளாதார வளர்ச்சியை (8%) கண்டிருக்கிறது. வட மாகாணத்திலிம் 22% வளர்ச்சியை காட்டுகின்றது. சமாதானத்தையும் உறுதி நிலையையும் முழு நாட்டிற்குமே நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். இவை தோற்றுவிட்ட ஒரு நாட்டிற்கான இலட்சணங்களா? முன்னில்லாத அளவுக்கு இந்தியா தனது முதலீடுகளை இலங்கையில் செய்து வருகின்றது. ஐ.ரீ.சீ. கொழும்பு காலி, முகத்திடலில் ஒரு ஹோட்டலை நிர்மானிக்கிறது. டாட்டா குழுமம், எயர்ரெல் கம்னி என்பன முதலீடுகளை செய்து வருகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டாக திருகோணமலையில் ஒரு மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்து வருகின்றன. இந்தியா எமது ரயில்வே பாதைகளை அமைத்துவருகிறது. கடந்த சில வருடங்களில் சுற்றுலாத் துறை ஆண்டுக்கு 40 வீதத்தினால் அதிகரித்து வருகிறது. இவற்றில் எது தோற்றுவிட்ட ஒரு அரசை குறித்துக் காட்டுகிறது? குறித்த வகையான சொற்பிரயோகங்கள் அரசியல் பின்னணியை சுட்டிக் காட்டுகின்றன.
கேள்வி: மனித உரிமை பேரவையில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவாலை வெறுமனே இலங்கைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கூட்டிற்கும் இடையிலான ஒரு பிரச்சினை மட்டுமே. என்றவாறாக காண்பிப்பதற்கு சில நிபுணர்கள் முனைகின்றனர். ஆயினும் இறுதி நாட்களில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஒட்டுமொத்த நிலைப்பாட்டையும் மாற்றியிருந்தது. அது எதிர்வு கூறக்கூடியதாக இருந்ததா? திடீரென இடம்பெற்ற ஒன்றா?
பதில்: நான் முன்பு கூறியது போன்ற தீர்மானம் துரதிஷ்டவசமானது அது புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், நல்லிணக்கம் ஆகிய எமது குறியிலக்குகளை எவ்விதத்திலும் வளமூட்டவில்லை. இந்நோக்கங்களை எய்துவதற்கு நாம் எமது சொந்த வழிகளில் முயற்சித்தோம். நாட்டினுள்ளேயே தீர்வுகளை பெறுவதே எமது நோக்கம். இயல்பாகவே வேறு எந்த மக்களையும் விட எமது மக்கள் பற்றி நாமே அதிகம் கரிசனை கொண்டவர்கள். இதனால் சர்வதேச சமூகத்தின் தவறான கருத்துக்கள் தவறான பார்வைகள் உதவப் போவதில்லை. ஐ.நா. தீர்மானம் பாதகமான சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்தியாவும் வேறு சில நாடுகளும் தமது சொந்தக் காரணங்களுக்காக சாதகமாக (இலங்கைக்கு) வாக்களித்திருக்க முடியும். நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம். இந்தியாவுடனான எமது வரலாற்று உறவுகள் வலுவானதாகவே இருக்கும். அயல்நாடுகள் என்ற வகையில் நமது நட்பு நிலை மோசமாக பாதிக்கப்படாத வகையில் நாம் வேறுபட்டு நிற்கும் நிலை இருந்துள்ளது.
கேள்வி: ஆயினும் பிராந்தியத்தில் அனேக வாக்குகளை நீங்கள் பெற்றிருந்தீர்கள். இலங்கையின் ராஜதந்திரம் ஆசியா மீது மையம் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா விடயத்தில் இவ்வாறு நடைபெறவில்லை. அமெரிக்கா தீர்மானம் வெற்றி பெற்றமைக்கு இலங்கையின் ராஜதந்திர செயற்பாடுகளில் உள்ள பலவீனம் காரணமா?
பதில்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடொன்றினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆயினும் தீர்மானத்தின் உள்ளடக்கம் அந்தளவு கவனத்திற்கான சிறப்பியல்புகளை கொண்டிருக்கவில்லை. இவ்விவகாரத்தை விடவுமே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய வேறு உலக விவகாரங்கள் உள்ளன. எனவே பிரேரணையை சமர்ப்பித்தவர்களின் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. தீர்மானத்தில் சிபாரிசு செய்யப்பட்டவை ஏற்கனவே படிப்படியான ஒரு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எமது மக்களுக்கு அதுவே சிறந்ததென்பதால் அவ்வாறு செய்யப்படுகின்றது. சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக அல்ல. ஆயினும் தீர்மானமானது எதனை சாதித்துள்ளது என்றால் நியூயோர்க்கில் இயக்கும் புலம்பெயர் தமிழ் குழுக்கள், லண்டனில் இயங்கும் உலக தமிழ் மன்றம், நோர்வேயில் இயங்கும் நெடியவன் இயக்கம் என்பவற்றிற்கு துணிச்சலை ஊட்டியுள்ளது. இக்குழுக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு தனி அரசை உருவாக்கும் நோக்குடனான தமிழீழப் பிரசாரங்களை முடுக்கிவிட்டு வரும் புலிகளின் மிச்ச சொச்சங்களே. தமிழ்நாட்டிலும் தனியரசு (ஈழம்) ஒன்றிற்கான ஆரவாரங்கள் இப்பொழுது உள்ளன. ஆயினும் வெற்றிவாய்ப்பு அவர்களுக்கு கிடையாது. இவற்றினால் சூழல் கெட்டு விடுவதற்கும் நல்லிணக்கம் சிக்கலடைவதற்குமே வாய்ப்புக்கள் அதிகம்.
கேள்வி: தீர்மானத்திற்கு முன்னதாக ஹிலாரி கிளின்டன், அமைச்சர் பீரிஸ் அமெரிக்கா வருமாறு அழைத்திருந்தார். பீரிஸ் போக மறுத்தது எதற்காக? அமெரிக்காவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தால் வேறு வகையான விளைவுகள் ஏற்பட்டிருக்காதா?
பதில்: இது உத்தேச அடிப்படையானது. அவரவர் வசதிகளுக்கு ஏற்ப நாட்டுத் தலைவர்கள் சந்தித்து கொள்வர். அத்தகைய ஒரு சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் பேசப்படும். தீர்மானம் இருதரப்புக்குமே தனி விசேடமானதாக இருக்கும்.
கேள்வி: இலங்கையுடன் பேச்சுக்கள் வைத்துக் கொள்ளப் போவதாக வாக்களிப்பின் பின் கிளின்டன் தெரிவித்திருந்தார். அமெரிக்காவுடன் பேச்சுக்கள் வைத்துக் கொள்வது பற்றி அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: அமைச்சர் அமெரிக்கா சென்றார். ராஜாங்க செயலாளருடனான பேச்சுக்கள் பயனுள்ளதõக இருந்தன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அமுலாக்கம் பற்றியது. 3 வருடங்களுக்கு முன் 300,000 ஆகவிருந்த இடம்பெயர்ந்தோர் தொகை இன்று 5000 மட்டுமே ஜூலை 31 க்கு முன் அவர்களும் குடியமர்த்தப்பட்டு விடுவர். அப்போது முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றலும் முற்றுபெற்று விடும். சில 100 பேர்கள் தவிர 11,000 புலிப் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். நாம் தமிழ் கட்சிகளையும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குள் ஈடுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதில் கலந்து கொள்ள வருமாறு அழைக்கின்றோம். நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கடல் கடந்த நாடுகளில் உள்ள குழுக்கள் இவற்றில் தலையிடல் ஆகாது. எமது பிரச்சினைக்கான தீர்வு கள யதார்த்த நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களால் இலங்கைக்குள்ளேயே வைத்து தீர்க்கப்படல் வேண்டும். வெளித் தலையீடுகளால் அல்ல.
கேள்வி: எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவையுடனான இலங்கையின் பேச்சுக்கள் எவ்வாறு இருக்கும்? 22 ஆவது பருவ அமர்வு தொடங்கும் நிலையில் தீர்மானம் தொடர்பிலõன முன்னேற்றங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்குமே!
பதில்: இலங்கைக்கான தீர்வு முயற்சிகளில் நல்லிணக்கம், அரசியல் தீர்வுகளுக்கு வெளியார் மாதிரிகளை திணிக்க வேண்டியதில்லை. பயன்தரும் விதமான ஒரு தீர்வை நாமே தயாரித்தல் வேண்டும். ஒரு பெரிய நாடான இந்தியாவுக்கு பொருத்தமான கூட்டாட்சி எமக்கு பொருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. எமது மக்களால் தயாரிக்கப்படும் ஒரு தீர்வை எம் அபிலாசைகளையும் சம கௌரவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். பிரிவினைவாதத்திற்கு இலங்கையில் இடமில்லை. இதனை தமிழர்கள் தெளிவாக நிராகரித்து விட்டனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 22 ஆவது அமர்வுக்கு முன்னதாக ஒக்டோபரில் நடைபெறும் கால மீளாய்வு கூட்டத்தில் நாம் மனித உரிமை அறிக்கையொன்றினை சமர்ப்பிப்போம். இதனை செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment