Wednesday, June 6, 2012

தூத்துக்குடியில் வேகமாக பரவுது டெங்கு:இதுவரை தென்மாவட்டங்களில் 52 பேர் பலி!

Wednesday, June, 06, 2012
தூத்துக்குடி::நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ஜனவரியில் டெங்கு காய்ச்சல் காணப்பட்டது. காய்ச்சலுக்கு இதுவரை தென்மாவட்டங்களில் 52 பேர் பலியாகியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 47 பேர் இறந்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காய்ச்சல் அறிகுறிகளுடன் 147 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் தற்போது வேகமாக டெங்கு பரவி வருகிறது. ஏப்ரல் 27ம் தேதி மாரீஸ்வரி என்ற நாலரை வயது குழந்தை, மே 18ம் தேதி சிப்பிகுளத்தைச் சேர்ந்த பியானி என்ற 8 மாத குழந்தை, 21ம் தேதி ஏரலைச் சேர்ந்த இசக்கிவேல்ராஜன் என்ற 7 மாத குழந்தை என 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாயினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்பிகுளம், வேம்பார், தருவைகுளம், ஏரல், அகரம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தூத்துக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 குழந்தைகள் உள்பட 13 பேரும், அழகேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 குழந்தைகளும் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் 14 குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் இன்று காலை காய்ச்சல் பாதிப்புடன் சேர்க்கப்பட்டனர்.

No comments:

Post a Comment