Wednesday, June 6, 2012

இரகசிய ஆவணம் எதனையும் அமெரிக்காவுக்கு வழங்கவில்லை:அநுரகுமார எம்.பியின் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் திட்டவட்ட மறுப்பு!

Wednesday, June, 06, 2012
இலங்கை::செயற்பாட்டுத் திட்டம் அடங்கலான இரகசிய ஆவணம் எதனையும் அரசாங்கம், அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு வழங்கவில்லை. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்தே அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கப்பட்டது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எமது உள்ளக விடயங்களில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெறுவதை இலங்கை முழுமையாக எதிர்க்கிறது. இது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் அவர் கூறினார்.

செயற்பாடுத் திட்டம் அடங்கலான இரகசிய ஆவணமொன்றை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமெரிக்காவுக்கு வழங்கியிருப்பதாக கூறி அநுர குமார திசாநாயக்க எம்.பி. நேற்று கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்தார்.

இப்பிரேரணைக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சார்பாக பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

உள்நாட்டு விடயங்களில் வெளிநாட்டு தலையீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். எமது உள்ளக விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு இடம்பெறுவதை இலங்கை முழுமையாக எதிர்க்கிறது

எமக்கு பாதிப்பாக இருந்தபோதும் 19 ஆவது மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனையை நாட்டு மக்களின் சுயகெளரவத்திற்காக நாம் எதிர்த்தோம். ஐ. நா. மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுபட்டது.

2012 பெப்ரவரியிலே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் எமது வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 2012 மார்ச் 3 ஆவது வாரத்தில் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்று அவர் அங்கு செல்லவில்லை. இந்த விடயம் இராஜாங்க செயலாளரின் கடிதம் மூலம் புலனாகிறது/

நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை

வடக்கு தேர்தல் என்பன தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் பேச வருமாறு அழைப்பிலிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. எமக்கு உத்தரவு அன்றி அழைப்பே விடுக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் வொஷிங்டனுக்கு செல்கையில் சகல கூட்டு கட்சிகளினதும் நிலைப்பாடு கிடைத்திருக்கவில்லை. அவை தயாராகும் நிலையில் காணப்பட்டது. அதனால் செயற்பாட்டுத் திட்டம் அடங்கிய முழுமையான ஆவணமொன்று தயாரிக்கப்படும் நிலை காணப்படவில்லை.

செயற்திட்டம் அடங்கலான இரகசிய ஆவணமொன்றை அமெரிக்காவுக்கு மே 18 ஆம் திகதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மிகவும் தெளிவான விரிவான அணுகுமுறை (விoசீprலீhலீnsivலீ approaணீh) முன்வைத்ததாகவே இராஜாங்க செயலகப் பேச்சாளர் கூறியிருந்தார். செயற்திட்டமொன்றை சமர்ப்பித்ததாக அமெரிக்கா ஒருபோதும் கூறவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு

நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் 285 உப துறைகள் அடங்கலாக 135 பிரதான சிபார்சுகள் இருப்பதாகவும் இதனை செயற்படுத்து வதற்கு 4 பிரிவுகளாக பிரித்துள்ளதை அமெரிக்க இராஜாங்க செயலாளருக்குத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

தேசிய கொள்கைகள் தொடர்பான சிபார்சுகள், இறுதிக்கட்ட யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிபார்சுகள், மனித உரிமை, மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிபார்சுகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மனிதாபிமான விடயங்கள் தொடர்பான சிபார்சுகள் என 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. சில சிபார்சுகளை பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவினூடாகவும், சில சிபார்சுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களினூடாகவும் முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதியின் செயலாளரின் கீழ் சிபார்சுகளை செயற்படுத்துவதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

குறுங்கால மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் சிபார்சுகளை செயற்படுத்தவும் அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுக்கவும் இருப்பது குறித்து அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

யுத்தத்துடன் தொடர்புடைய நபர்களை சமூக மயப்படுத்துதல், எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மிதி வெடி அகற்றும் நடவடிக்கையின் முன்னேற்றம், அவசரகால சட்டத்தை நீக்குதல், காணி உரிமைகளை மீள வழங்குதல் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை வட மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தெரிவுக்குழு அடங்கலான அரசியல் நடவடிக்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த விடயங்கள் முற்றிலும் தவறானவை யாகும்.

No comments:

Post a Comment