


Wednesday, June, 06, 2012இலங்கை::இலங்கை பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபயா ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இலங்கை வெளியுறவுத்துறை அமைசச்ர் ஜி.எல். பெரீ்ஸ் தலைமையிலான அந்நாட்டு பிரநிதிகள் குழு கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும், பெரீஸும் சேர்ந்து மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியையும், அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டெம்ப்சியையும் சந்தித்து பேசினர்.
அந்த சந்திப்பின்போது இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும் முன்வர வேண்டும் என்று கோத்தபயா வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு இந்தியாவும், அமெரிக்காவும் அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கின்றன.
இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்குமாறு இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்ற முறையில், அந்த வேண்டுகோளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் சாதகமான பதிலை அளித்துள்ளன.
கடலோர நாடு என்ற முறையில், இந்திய பெருங்கடலில் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கும். சர்வதேச தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment