Wednesday, June 6, 2012

இராணுவப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய முத்தலிப்பை படுகொலை செய்வதற்கு புலிகள் 1.5 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்!

Wednesday, June, 06, 2012
இலங்கை::இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய லெப்டினன் கேணல் முத்தலிப்பை படுகொலை செய்வதற்கு, புலிகள் 1.5 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர். சக உத்தியோகத்தர் ஒருவருக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆவணங்களிலிருந்து இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

முத்தலிப்பை படுகொலை செய்ய பணம் பெற்றுக்கொண்ட உயர் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு மே மாதம் கிருலணப்பனை பிரதேசத்தில் வைத்து முத்தலிப் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரணவை படுகொலை செய்ய ஒத்துழைப்பு வழங்கினால் மேலும் பணம் வழங்குவதாக புலிகள் குறித்த அதிகாரிக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உயர் அதிகாரி ஆழ ஊடுறுவித் தாக்கும் படையணியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச அழுத்தம் காரணமாக யுத்தம் இடைநிறுத்தப்படும் என நம்பிய புலிகள் பிற்காலத்தில் மீளப் பயன்படுத்தும் நோக்கில் இவ்வாறான பல ஆவணங்ளை மிகவும் பாதுகாப்பாக மறைத்து வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment