Wednesday, June, 06, 2012புதுடெல்லி::இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக வைஸ் அட்மிரல் டி.கே ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மாவின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அவரது இடத்தில் ஜோஷி நியமிக்கப்படுகிறார்.
கடற்படை போர் திட்டங்களில் வல்லுநரான ஜோஷி, மேற்கு கடற்படை பகுதி கமாண்டராக இருந்து வந்தார். ஏவுகணை தாங்கிய போர்க் கப்பலான ஐஎன்எஸ் குத்தார், எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ரன்வீர் கப்பல், விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றை வழி நடத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கடற்போர் திறன் கல்லூரியில் ஜோஷி பட்டம் பெற்றவர். மும்பையில் உள்ள கடற்படை கல்லூரி, டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் ஜோஷி பயிற்சி பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment