Wednesday, June 6, 2012

உத்தரவை மீறிய லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

Wednesday, June, 06, 2012
இலங்கை::காலி, வக்வெல்ல பகுதியில் உத்தரவை பொருட்படுத்தாது பயணித்த லொறியின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாடுகளை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை பொலிஸ் குழுவொன்று லொறியை வழிமறித்ததாக பொலிஸார் குறிபி்ட்டனர்.

லொறியை சோதனையிடுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தரொருவர் அதில் ஏறுவதற்கு முயற்சித்த போது லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதன்போது லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பி்ட்டுள்ளனர்.

வீரகெட்டியில் இருந்து காலி நோக்கி லொறியில் கொண்டு செல்லப்பட்ட 10 மாடுகளில் மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment